Header Ads

test

மாமியாரை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்த மருமகன்.

 இரத்தினபுரி, எஹேலியகொட பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளின் கணவரே இந்த குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும், கொலையின் பின்னர் சந்தேகநபரான மருமகன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 60 வயது எனவும், சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைமறைவான சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments