Header Ads

test

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ள ஜனாதிபதி.

 2025ஆம் ஆண்டின் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (20) கண்டிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போதே ஜனாதிபதி இந்த தகவலை வழங்கியுள்ளார். 

இதன்படி, தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி அநுரகுமார, கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிாிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று கொண்டுள்ளார். 

இந்த விஜயத்தின் போது, தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.



No comments