Header Ads

test

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் தலை நசுங்கி பலியான நபர்.

 கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்றுடன்  மோட்டார் சைக்கிளில் மோதியதில் அதில் பயணித்தவர் பேருந்து சில்லுகளுக்கிடையில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று (26.12.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் தலை பேருந்தின் பின் சக்கரத்தினால் முற்றாக நசுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்துடனையே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.


No comments