Header Ads

test

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களின் 20 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (24.12) இடம்பெற்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.        

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு காலை 9.25 - 9.27 வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

அத்துடன் சுனாமி பேரவலம் தொடர்பாகவும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாகவும் அரச அதிபரின் கருத்துரயும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.












No comments