Header Ads

test

யாழில் புகையிரதம் முன் பாய்ந்து உயிரைமாய்க்க முயன்ற பெண் வைத்தியசாலையில் அனுமதி.

 யாழ்ப்பாணத்தில் புகையிரதம் முன் பாய்ந்து உயிரைவிட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(31.12.2024) காலை யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலின் முன்பாக தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பெண்ணொருவர் பாய்ந்து உயிரைவிட முனைந்துள்ளார். 

எனினும், படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், கொடிகாமம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments