தமிழர் பகுயில் கரையொதுங்கிய இரு படகுகள்.
மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள் என நம்பப்படும் 2 படகுகள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இன்றையதினம் (31-12-2024) காலை கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் முல்லைத்தீவில் மியன்மார் நாட்டு அகதிகளுடன் படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது. குறித்த படகுடன் பயணித்த மேலும் 2 படகுகள் சேதமடைந்தமையால் கடலில் கைவிடப்பட்டது என உயிர் தப்பிய மியன்மார் அகதிகள் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு பழுதடைந்தபோது கைவிடப்பட்ட 2 படகுகள் எனக் கருதப்படும் படகுகள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஆள்கள் எவரும் இன்றி இன்று கரையொதுகியுள்ளன.
கரையொதுங்கிய படகுகள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேநேரம் 2 படகுகளும் மியன்மார் அகதிகள் பயணித்த படகுகள்தானா அல்லது வேறு படகுகளா எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
Post a Comment