Header Ads

test

வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பலி.

 வவுனியாவில் முதலை கடித்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - சூடுவெந்தபுலவை பகுதியை சேர்ந்த , 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (21.12.2024) இடம்பெற்றுள்ளது.

மாடுகளை மேய்ப்பதற்காக பாவாற்குளம், சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற பெண் ஒருவர், அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப் பகுதியில் இறங்கிய போதே முதலை அவரை கடித்து இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


No comments