நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ருந்த பிடியாணைக்கு அமைவாக வவுனியாவில் ஐவர் கைது.
வவுனியா , ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ருந்த திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரையும், திகதியிடப்பட்ட பிடியாணையின் கீழ் நான்கு பேரும் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment