Header Ads

test

வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி இருவர் படுகாயம்.

 நீர்கொழும்பு - சீதுவ, லியனகேமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரிழந்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இன்று (28-12-2024) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர்களை  நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குடும்பத்தின் மூத்த மகன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 73 வயதான வர்த்தகர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மற்றைய மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய காரை கட்டுநாயக்க, கோவின்ன பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகில் வைத்து எரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த துப்பாக்குச் சூட்டு சம்பவத்திற்காக T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments