மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்தக் கோரியுள்ள சுமந்திரன்.
மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வர முன்னர் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை சிபாரிசு செய்தவர்களின் பெயர்ப் பட்டியல்களை ஆட்சியமைத்து 3 நாட்களுக்குள் வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.
எனினும், ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றவர்களின் பெயர்களை மாத்திரமே அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
எனினும், அவற்றை சிபாரிசு செய்தவர்களின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அது உடனே வெளியிடப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment