முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் சற்று முன் கைது.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரனான திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனுஷ நாணயக்காரவின் சகோதரன் மொனராகலை, பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment