Header Ads

test

விசாரணைக்கு அழைக்கப்பட்ட கருணா.

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  விநாயகமூர்த்தி முரளிதரன் இன்றையதினம்(19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ரவீந்திரநாத் கடத்தல்  விவகாரம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியில் வந்த கருணா ஊடகங்களிடம் பேசும் போது, ரவீந்திரநாத் கடத்தல் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மீண்டும் விசாரணைக்கு வரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 



No comments