Header Ads

test

கன மழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு.

நாட்டில்  கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால் யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/14 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/165 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், ஜே/178 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/144 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 பேரும், ஜே/147 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments