Header Ads

test

கால்வாய் ஒன்றிலிருந்து மீட்க்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

 மலையக தொடருந்து மார்க்கத்தில் பண்டாரவளைக்கும் தியத்தலாவிற்கும் இடையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பதுளைக்கான தொடருந்து சேவை 3 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.


No comments