Header Ads

test

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கை.

 கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பல இடங்களில்  மாவட்ட அளவீட்டு அலகுகள் திணைக்களத்தினால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம், அக்கராயன், வட்டக்கச்சி, பரந்தன் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், அரிசி ஆலைகள், எரிபொருள் நிரப்பு நிலையம், மீன்சந்தை, பழக்கடைகள் மற்றும் தேங்காய் மொத்த விற்பனை நிலையம் ,நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஊடாக உரிய காலத்தில் முத்திரையிடப்படாத மற்றும் அரச அனுமதியற்ற தராசுகள் குறித்த திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments