Header Ads

test

கன மழையால், வவுனியா மாவட்டத்தில் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவு - நிலமைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கம்.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தொடர் கன மழையால், தொடர் கன மழையால் வவுனியா மாவட்டத்தில் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், தமது நிலமைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளினுடைய பப்பாசிப் பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா  மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலகு பிரிவிற்குட்பட்ட, பப்பாசி செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றுள் 100 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 75 வீத அழிவாக 17 ஹெக்டேயரும், 50 வீத அழிவாக 21 ஹெக்டேயரும், 25 வீத அழிவாக 25 ஹெக்டேயரும் அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைகளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பப்பாசி செய்கையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகளின் பாரிய நிதிச் செலவில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசிப் பயிற்செய்கைகள் அண்மையில் பெய்த கன மழையினால், சில தோட்டங்கள் முழுமையாகவும், சில தோட்டங்கள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பப்பாசிச் செய்கைகள் அறுவடைக்குத் தயாரான நிலையிலேயே இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில், கிராம சேவையாளருக்கு முறையிட்டதற்கு அமைவாக அவர்,  கிராமங்களில் பாதிக்கப்பட்ட பப்பாசிப் பயிற் செய்கைகளைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பாதிப்பு நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட சில  விவசாயிகள், பப்பாசித் தோட்டங்களை படம் எடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தும் அவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், உரிய தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ள பப்பாசிச் செய்கையாளர்களுக்குரிய நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேன்டும் எனக் கோரியுள்ளனர்.

தகவல் : சிவகுமார் திவியா.









No comments