வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பு.
அனைத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 65 ஆக இருந்தது, பின்னர் அது 60 ஆகக் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment