இலங்கையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை.
இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா,கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டியில் உள்ள யட்டிநுவர, உடபலாத, உடுதும்பர, தெல்தொட்டை, தொழுவ, அகுரண, மற்றும் பண்வில உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment