அம்பாறையில் இடம்பெற்ற மனதை உலுக்கும் சம்பவம் - 2 பிள்ளைகள் உட்பட மூவரை இதுவரை காணவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கடற்பகுதி ஒன்றில் 2 பிள்ளைகள் மற்றும் நபரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காணாமல் போன மூவரையும் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment