நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தொடுக்கப்பட்ட புதிய வழக்கு - 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், பிற வழிகளிலும் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார் எனவும், அண்மையில் வைத்தியசாலைக்குள் நுழைந்து களேபரத்தில் ஈடுபட முயன்றபோதும், அது தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது எனவும் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் தன்மீது மோசமான பொய்ப்பிரச்சாரங்களில் அர்ச்சுனா ஈடுபட்டிருந்தார் எனவும் தெரிவித்து சட்டத்தரணி கு.குருபரன் ஊடாக இந்த மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்துள்தாக தெரியவந்துள்ளது.
Post a Comment