சுகாதார துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்.
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு, டெங்கு பரவுவதைத் தடுக்க நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறு பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 45,448 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் மாத்திரம் 19,487 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment