Header Ads

test

இலங்கையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை.

 கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒருகொடவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தகராறின்போது காயமடைந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments