Header Ads

test

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது.

 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு மாலம்பே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து போதை மாத்திரைகள், குஷ் போதைப்பொருள் மற்றும் இரண்டு தராசுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம்   தொடர்பான மேலதிக விசாரணைகளை நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments