Header Ads

test

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்.

 சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாளில் கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமையும் என அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், அந்த குழுக்களின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் மேற்கொள்வார் என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.



No comments