ஆளுநர் தலைமையில் மன்னாரில் நடமாடும் சேவை.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான குழுவினரால் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்படவுள்ளது.
நாளைமறுதினம் (27) இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்றும் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment