இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் மேற்படி குளிரூட்டியை இலஞ்சமாக பெற்றதாக கூறப்படுகின்றது.
Post a Comment