Header Ads

test

வவுனியாவில் தீயில் எரிந்து உயிரை மாய்த்த இளம் குடும்ப பெண்.

வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (29) 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


No comments