Header Ads

test

கிளிநொச்சியில் மிகப்பிரமாண்டமாக வெளியீடுகண்ட "விநாயகனே" பாடல்.

நேற்றைய தினம் (01) வட்டக்கச்சி கல்மடுநகர் "நெல்முத்து விநாயகர்" ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விநாயகரின் பெருமைகூறும் பாடல் ஒன்று Ceylon Dreams Studioவினரால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. இப்பாடலுக்கான அனுசரணையை பத்மநாதன் குடும்பம் கல்மடு, தவராசா குடும்பம் கல்மடு, நாகேஸ்வரேன் குடும்பம் கல்மடு ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வானது ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு, ஆலயத்தின் பிரதம குரு சிறி ஐயா அவர்களும், அவரோடு இணைந்த குருமார்களும் பங்குபற்றியிருந்தனர்.

நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டதோடு, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள், கலைஞர்கள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த விநாயகனே பாடலுக்கான வரிகள் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் (உளநல ஆலோசகர்) இசை ஸ்ரீநிர்மலன், குரல் கீர்த்தி ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் (சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர்)அவர்களால் தயாரிக்கப்பட்ட

வரவேற்பு நடன பாடலும் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. 

இப் பாடலுக்கான வரிகள் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் (உளநல ஆலோசகர்), இசை ஸ்ரீநிர்மலன், குரல் தேனுகா, ஜதி செல்வரத்தினம் வினோதினி (நடன ஆசிரியர்) ஆகியோர் வழங்கியிருந்ததோடு, இவ்விரு பாடலுக்குமான நடனத்தினை ம.றெஜிஸ்ரிகா அவர்கள் வழகியிருந்தார்.

"விநாயகனே" பாடல் Ceylon Dreams Studioவின் உரிமையாளரின் தாயார் தவராசா செல்வநாயகி  அவர்கள், ஆலயத்தின் பிரதம குரு சிறி ஐயாவோடு இணைந்து வெளியீடு செய்துவைத்தார்.

ஆலயத்தின் பாடல் உருவாக்கத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கும் பிரதம குருவிற்கும் மதிப்பளிக்கும் முகமாக Ceylon Dreams Studioவினரால் கெளரவ விருதுகள் வழங்கப்பட்டதுடன், பாடல் தயாரித்தமைக்காக Ceylon Dreams Studioவினருக்கு மதிப்பளித்து ஆலய நிர்வாகத்தினர் கெளரவ விருது வழங்கி சிறப்பித்திருந்தனர்.

மேலும் இன்றைய நிகழ்வில், ஜெ.அபிநயாத.திஷானுகா ஆகியோரும் நடனத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


How to Share With Just Friends

How to share with just friends.

Posted by Facebook on Friday, December 5, 2014






















No comments