யாழ். நயினாதீவில் கப்பல் திருவிழாவில் நடந்தேறிய கொடூரச் சம்பவம்.
யாழ். நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், பல வாள்வெட்டு சம்பவங்களோடு தொடர்புடையவர் என்ற ரீதியில், யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்ட பின்னர், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில்முற்படுத்தபட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment