சகோதரியின் கணவனால் கர்ப்பமாக்கப்பட்டுள்ள சிறுமி.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவர் அவரது சகோதரியின் கணவனால்
குறித்த சிறுமி கடந்த (20.03.2024) அன்று ஆறுமாத கர்ப்பம் தரித்த நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது குறித்த குற்றச்செயல் வெளிவந்துள்ளது.
வள்ளுவர்புரம் பகுதியில் சிறுமி தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளதுடன், சிறுமியின் சகோதரியின் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் சகோதரியின் கணவனுடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சகோதரியின் கணவன் சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உற்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சிறுமியை அழைத்துக்கொண்டு சகோதரியின் கணவன் திருமணமாகாத நிலையில் தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் உரிய திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment