ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை.
முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வௌியிட்ட கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment