இளையோரின் விழிப்புணர்வுக்காக நடாத்தப்பட்ட மாபெரும் கபடிப் போட்டி.
தாயக அரசியல் நடுவத்தின் அனுசரணையில் மு/மாங்குளம் அம்பாள்புரம் பாடசாலை மைதானத்தில் 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று “இளையோரின் விழிப்புணர்வுக்காக” நடாத்தப்பட்ட மாபெரும் கபடிப் போட்டியில், ஆண் / பெண் இருபாலரும் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6:00 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் 6 ஆண்கள் அணிகளும், 2 பெண்கள் அணிகளும் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, உளநல ஆலோசகரும் ஈழத்து எழுத்தாளருமான திரு.வவுனியூர் ரஜீவன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.இரத்தினராசா சகிதரசீலன், முன்னை நாள் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.செ.தவராசா அவர்களும், மாங்குளம் காவல் நிலைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிடப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் நிகழ்வைச் சிறப்பித்ததோடு மட்டுமல்லாது, இளையோருக்கான விழிப்புணர்வு சார்ந்து உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் கீழே குறிப்பிடப்படுட்டுள்ள அணிகள் வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இடம் - முத்தமிழன் A அணி (ஆண்கள்)
இரண்டாம் இடம் - கொல்லவிளாங்குளம் உதயதாரகை அணி (ஆண்கள்)
முதலாம் இடம் - முத்தமிழன் அணி (பெண்கள்)
இரண்டாம் இடம் - பாலிநகர் மகாவித்தியாலய அணி (பெண்கள்).
Post a Comment