Header Ads

test

திடீரென மயங்கி விழுந்த பாடசாலை மாணவிகள்.

 தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு செலுத்திய தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7ஆம் மற்றும் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் நேற்று (28) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மற்றும் 13 வயதுடைய இந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு பல்வேறு அறிகுறிகள் தோன்றியுள்ளன. வயது வந்தோருக்கான தடுப்பூசி குறித்த மாணவர்களுக்கு செலுத்தப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் குழுவொன்று நேற்று கல்லூரியில் தடுப்பூசியை செலுத்தியது.

தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம், பயம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நோயின் அறிகுறிகளை வெளிக்காட்டிய மாணவர்களை நோயாளர் காவு வண்டிகளில் ஏற்றி வைத்தியசாலையில் அனுமதிக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக களுத்துறை கல்வி பிராந்திய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக களுத்துறை கல்லஸ்சேன சிறுவர் மற்றும் பெண்கள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments