Header Ads

test

வவுனியாவில் இளம் யுவதி ஒருவர் எடுத்த விபரீத முடிவு.

 வவுனியாவில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

சம்பவத்தில் வவுனியா ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

யுவதி உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இளம் யுவதி சடலமாக  மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



No comments