அரிசியின் விலை தொடர்பில் வெளிவந்த தகவல்.
இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இந்த நிறுவனங்களுக்கு இஷ்டம்போல் விலையை உயர்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை கிலோ ரூ.300க்கு அருகில் இருக்கும் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
Post a Comment