தமிழ் இளைஞன் ஒருவர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.
குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தையடுத்து அப்பகுதியின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குழு மோதலில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான ரஞ்சித் என்ற 28 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோதலில் காயமடைந்த மேலும் இருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு பிரிவினருக்கும் இடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு நெருக்கமானவர்கள் மோதலில் தலையிட்டதாகவும், மோதல் தீவிரமடைந்ததையடுத்து இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment