மட்டக்களப்பில் பொலிஸாரின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்.
மட்டக்களப்பில் பொலிஸார்ﺸ மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றதாக கூறப்படும் நிலையில், பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் முழு விபரங்களும் அடங்கிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல்களை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கியிருப்பவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், 1865ஆம் ஆண்டின் 16ம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 75வது பிரிவுக்கு அமைவாக செயற்படும் ஆணை எனும் தலைப்பில் விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment