காலநிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதேவேளை, நாளை தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Post a Comment