Header Ads

test

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் - இலங்கையில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம்.

 நுரைச்சோலை - ஷெடபொல களப்பில் இருந்து குடும்பப் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெட்டபொல - மன்பூரிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான செபஸ்டியன் உர்சுலா (வயது 52) என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு கூரிய ஆயுதங்களால் பெண்ணின் தலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பெண்ணைக் கொலை செய்தபின்னர், அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய், உடைகள் மற்றும் தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், மருந்து, தொலைபேசி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து சதுப்பு நிலக் காட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments