Header Ads

test

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

 கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்கான மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று (27.08.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

இந்த தெரிவின்போது, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.

எனவே, தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் தரத்தில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து 13ஆம் தரத்தில் தொழிற்கல்வி தொடர்பான பாடங்களின் கீழ் என்.வி.கிவ் நான்காம் நிலை தொழிற்பயிற்சி கற்கைநெறி ஒன்றை நிறைவு செய்ய முடியும்.

அத்துடன், சிறுவர் உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆய்வுகள், வாகன இயந்திர தொழில்நுட்பவியல் மற்றும் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட  20 பாடங்கள் இந்தத் தொழிற்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளன.

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கும் நோக்கில் இந்த தொழிற்கல்வி நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இது தொடர்பான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளின் அதிபருக்கு அனுப்பிவைக்குமாறும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 


No comments