Header Ads

test

நாட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது.

 கொழும்பு புறநகர் பகுதியான மட்டக்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தை பகுதியில் கடந்த 24.08.2023 அன்று இரவு இடம்பெற்ற தாக்குதலில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் விசாரணைக்கு அமைய இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று (26.08.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 16 வயது சிறுவன் உட்பட, 22, 27, 34 மற்றும் 38 வயதுடைய மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் குழாய், பைண்டிங் கட்டர் மற்றும் பொக்ஸ் பார் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



No comments