Header Ads

test

யாழில் மீட்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள்.

 யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, தச்சந்தோப்பு பகுதியில் காணியை துப்பரவு செய்யும்போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை (8) முற்பகல் 11.30 மணியளவில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும்போதே மோட்டார் குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments