Header Ads

test

பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.

கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் பணிபுரியும் சாரதி கான்ஸ்டபிள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் முப்பதாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு பெண் ஒருவருக்கு மூன்று மாத்திரைகளை உட்கொள்ளச் செய்து கருக்கலைப்பு செய்வதாகவும் இவர் தொடர்பான விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


No comments