நண்பனுடன் கடலுக்குச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.
திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார். ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கடலினுள் நீரோட்டப் பாதையில் செல்லும்போது ஜக்சன் படகிலிருந்து இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் சுழியோட்டம் அதிகமாக இருந்தமையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது ஜக்சனுடன் சென்ற நண்பர் அவரைத் தேடிக் காணாத நிலையில் ஊருக்குத் திரும்பி விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஜக்சனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
Post a Comment