குறைந்த வருமானம் பெறுவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
450 மில்லியன் டொலர் நிதியுதவியை சீனா இதற்காக வழங்கவுள்ளது.
கொழும்பின் 5 இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சத்யானந்த தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 1995 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இந்த வீடமைப்பு திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment