அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் - சஜித் அறைகூவல்.
அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களின் மனித உரிமைகளை மீறி மக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அதேவேளை, தொழிற்சங்கத்தினரையும், மாணவ போராட்டக்காரர்களையும் பயங்கரவாதிகளாக அரசாங்கம் அடையாளப்படுத்துகின்றது. கோட்டாபய ராஜபக்சவை விரட்ட வீதிக்கு இறங்கிய இலட்சக்கணக்கான மக்களையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இதனூடாக மாதக்கணக்காகச் சிறையில் அடைக்க அரசாங்கம் முற்படுகின்றது.
ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை. எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்குச் செல்வதற்குப் பதிலாக அரசிலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருக்கின்றனர்.
கட்சி தாவல் செய்தி கேட்டு முன்னைய, எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது உறுப்பினர்களைப் பாதுகாத்துக்கொள்ள சிங்கபூருக்கு அனுப்பியது போன்று எமக்கு அத்தகைய தேவைப்பாடு இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment