Header Ads

test

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சமத்துவக் கட்சியின் மே தினம்.

அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம், மக்களின் உரிமைகளை
மீட்டெடுப்போம் எனும் தொணிப்பொருளில் சமத்துவக் கட்சியின் மே தினம்
நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வரும் முதலாம் பிற்பகல் 2
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக் கட்சியின் மே தின செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தமிழ் மக்கள் ஏற்கனவே போரின் நெருக்கடியையும் போர்க்காலப் பொருளாதார
நெருக்கடியையும் மிக நீண்டகாலமாகச் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள்.
அந்த நெருக்கடிகளிலிருந்து மீளமுதல் இப்பொழுது ஏற்பட்டிருக்கும்
பொருளாதார நெருக்கடியும் தொடரும் இன ஒடுக்குமுறையின் நெருக்கடியும்
இணைந்து மேலும் பெரிய நெருக்கடிச் சுமையை உருவாக்கியுள்ளது. இதற்குள்
புதிய பயங்கரவாதச் சட்டத்தை அமூல்படுத்துவதற்கு அரசாங்கம்
முயற்சிக்கிறது.

நாட்டில் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும்
உருவாக்குவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே ஆட்சி நடாத்தப்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு சிந்திய கண்ணீரும் இரத்தமும் கொஞ்சமல்ல.
இதிலிருந்து நாம் மீள வேண்டும். இனியும் சம்பிரதாயமான அரசியல்
வாக்குறுதிகளை நாம் நம்ப முடியாது. சம்பிரதாயமான மேதின நிகழ்வை
நடாத்துவதில் அர்த்தமில்லை.

இன்று பிற நாடுகளிலும் சர்வதேச வங்கிகளிடத்திலும் அடமானமாகியுள்ள
நாட்டில்  நாம் போராடாமல் இருக்க முடியாது. எமது போராட்டம் அனைத்து
ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கட்டும். மக்களின் விடுதலையை
நோக்கியதாக அமையட்டும்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த மே தின நிகழ்வில் பொது மக்கள், தொழிற் சங்கங்களின்
பிரதிநிதிகள்,  உள்ளிட்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.



No comments