Header Ads

test

சாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான பொலிஸ் வாகனம்.

 வவுனியா - உலுக்குளம் பகுதியில் வவுனியா பொலிஸாரின் ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (05-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் ஏற்பட்ட அசம்பாவிதம்: விபத்துக்குள்ளான பொலிஸ் ஜீப் வாகனம்! | Vavuniya Police Jeep Involved In An Accident

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த வவுனியா பொலிஸாரின் வாகனம் வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும், வாகனத்தில் பயணித்த பொலிஸாருக்கு எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்தியா அரசினால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ் வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments