கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி.
புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதன் போது மனைவி தனது கணவரின் மார்புப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபரான பெண் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுசந்தேகநபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment