பணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்ட தம்பதிகள்.
பதுளையில் பணத்திற்காக வயோதிப தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமோதர, பல்லகெடுவ, மாவெலகம பிரதேசத்தில் பணத்தகராறு காரணமாக வயோதிப கணவன் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையை தம்பதியின் பேரன் செய்துள்ளதாகவும் கொலையாளி அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
75 மற்றும் 68 வயதுடைய தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் பேரன் நேற்று இரவு தம்பதியரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், பின்னர் இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண், பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Post a Comment